கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் 2 வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்க பொருள்களுக்குரிய வரியை கனடாவும் இடைநிறுத்தியுள்ளது.
மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டார். மார்ச் 4 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வந்தது. இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல அமெரிக்காவின் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்தும், பண வீக்கம் தாறுமாறாக உயரும் என ட்ரம்ப்பின் முடிவின் மீது அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வரி விதிப்பை ஒரு மாதத்துக்கு ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.