ரஷ்யாவுக்கு எதிராக அதிக வரி மற்றும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிறுத்தியுள்ளது. அத்துடன், உக்ரைனுக்கு அளித்து வந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது ரஷ்யாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்களை நடத்தி வருவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு பகுதியாக புதிதாக பொருளாதார தடைகள், அதிக வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், இந்த தடைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.