வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தற்போது அவர் வெளிநாட்டு கார்களுக்கு அதிக வரி விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
' வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, ஏப்ரல் 2ம் திகதி முதல் 25 சதவீத வரிகள் விதிக்கப்படும். ஏப்ரல் 3ம் திகதி முதல் வரி வசூல் துவங்கும். இந்த புதிய வரி விதிப்பு நிரந்தரமாக இருக்கப் போகிறது." என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் மேம்படுத்துவதே புதிய வரி விதிப்பின் நோக்கமாகும். இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். இது நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத வளர்ச்சியைத் உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன. இது மிகவும் நேரடியான தாக்குதல் என்றும் சாடியுள்ளன.