ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று காலை வெளியிட்டார்.
ஆளுநருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மேற்படி அறிவிப்பு வெளியான நிலையில், நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐந்துவாரகால தேர்தல் பிரசாரத்தை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளன. அரசியல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரசார களத்தில் வாழ்க்கைச் செலவு விவகாரம் பிரதான பேசுபொருளாக மாறவுள்ளது.
2022 இல் நடைபெற்ற கூட்டாட்சி தேர்தலில் லேபர் கட்சி வெற்றிவாகை சூடி இருந்தாலும், இம்முறை லிபரல் கூட்டணியின் செல்வாக்கும் அதிகரித்துள்ளதால் சமநிலையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.