உக்ரைனை தற்காலிகமாக ஐ.நாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இது பற்றி விவாதிக்க முடியும். இது ஜனநாயக தேர்தல்களை நடத்துவதற்கும், மக்களால் நம்பப்படும் ஒரு திறமையான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உதவும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போதைய உக்ரைன் அதிகாரிகள் அனைவரும் சட்டவிரோதமானவர்கள் என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ரஷ்யா அமைதியை நோக்கிய நகர்வுகளைத் தடுக்க முயற்சி நடக்கிறது. போரை தொடர முயற்சி நடக்கிறது என இதற்கு உக்ரைன் ஜனாதிபதி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.