அமெரிக்காமீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34 சதவீத பழிவாங்கும் வரிகளை விதித்தது.
ஏப்ரல் 8 ஆம் திகதிக்குள் சீனா தனது வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் திகதி முதல் சீனா மீது 50 சதவீத கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும்." எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீனாவுடனான அனைத்து பேச்சுகளும் நிறுத்தப்படும்." எனவும் அவர் எச்சரித்துள்ளார்.