ஈரான் -அமெரிக்கா அடுத்த சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை ரோமில் நடைபெறும் என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஓமான் மஸகட்டில் முலாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் எங்கு நடத்தப்படும் என்பது குறித்த இழுபறிக்கிடையில் இந்த வார இறுதியில் அமெரிக்காவுடனான ஈரானின் அ
அடுத்த சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முடிவு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி மேம்பாடு தொடர்பாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன. ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்துவதாக டிரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார்.
பதிலுக்கு ஆயுத தரத்திற்கு அருகில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்புடன் அணு ஆயுதத்தைத் தொடரலாம் என்று ஈரானிய அதிகாரிகள் அதிகளவில் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்.