கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் வத்திக்கானில் இன்று காலமானார்.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்ஸில் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், 38 நாட்கள் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் சற்று தேறிய நிலையில் மார்ச் 23 ஆம் மீண்டும் வத்திக்கான் திரும்பினார்.
வழக்கமான பணிகளை பார்க்கவும் தொடங்கினார். நேற்று ஈஸ்டரை முன்னிட்டு கத்தோலிக்கர்களுக்கு ஆசியும் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை போப் பிரான்சிஸ், காலமானதாக, வத்திக்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவிற்கு, பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிஸ் நகரில் 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி போப் பிரான்சிஸ் பிறந்தார்.
1969ம் ஆண்டு கத்தோலிக்க பாதிரியராக பணியில் சேர்ந்தார். பல்வேறு பதவிகளை பெற்ற இவர் 2001ம் ஆண்டில் கார்டினல் ஆக பதவி உயர்த்தப்பட்டார்.
2013ம் ஆண்டு போப் ஆக இருந்த பெனடிக்ட் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய போப் ஆக பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர்.
சபா. தயாபரன்