வடகிழக்கு சீனாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட உணவக தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வடகிழக்கே சுமார் 580 கிமீ (360 மைல்) தொலைவில் உள்ள லியோனிங் மாகாணத்தின் லியாயாங் நகரின் சான்லி சுனியாங் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதியம் 12:25 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்துள்ளது.
இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து கடுமையான தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை வெளியேறுவதை ஒளிப்பட பதிவுகள் காட்டுகின்றன
சம்பவ இடத்திற்கு 22 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 85 தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் சம்பவ இடத்திலேயே மீட்புப் பணிகள் நிறைவடைந்து மக்கள் துரிதமாக வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய மாதங்களில் இதுபோன்ற கொடிய சம்பவங்களை சீனா கண்டுள்ளது. ஏப்ரல் 9 ஆம் தேதி, வடக்கு சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர்.
ஜனவரி மாதம், பெய்ஜிங்கின் வடமேற்கே உள்ள ஜாங்ஜியாகோ நகரில் உள்ள காய்கறி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.
அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, சீனாவின் கிழக்கு நகரமான ரோங்செங்கில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் இறந்தனர்.
மோசமாகப் பராமரிக்கப்படும் உள்கட்டமைப்பு, சட்டவிரோதமாகச் சேமிக்கப்படும் ரசாயனங்கள், தீ வெளியேறும் வழிகள் மற்றும் தீ தடுப்பு மருந்துகள் இல்லாதது, பெரும்பாலும் ஊழலால் தூண்டப்படுவது போன்றவை இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணிகள் என்று கூறப்படுகின்றது.
சபா.தயாபரன்