ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ விரைவாக பரவியது. ஜெருசலேம் அருகே காட்டுத் தீ பற்றியதில், பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன.
ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அடக்க முயற்சிக்கின்றனர். தீ விபத்தில் சிக்கிய 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் 10 ஆண்டுகளில் மிக மோசமான தீ விபத்தாக இந்த சம்பவம் அறியப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் காடுகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேற்கு காற்று புறநகர்ப் பகுதிகளுக்கு நகரத்திற்குள் கூட கூட தீயை எளிதில் தள்ளும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
கிரீஸ், சைப்ரஸ், குரோஷியா, இத்தாலி மற்றும் பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை இஸ்ரேல் உதவிக்காக அணுகியுள்ளது.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு பாலஸ்தீனிய சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை, நகரின் தெற்கே உள்ள ஒரு திறந்தவெளியில் மீண்டும் தீ வைக்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த பல இஸ்ரேலிய சுதந்திர தின நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சபா.தயாபரன்.