நியூசிலாந்து கடற்படையின் கப்பல் ஒன்று தீப்பிடித்து சமோவாவில் மூழ்கியது. அதில் இருந்த 75 பணியாளர்களும் , பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக நியூசிலாந்து பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
கடற்படையின் சிறப்பு டைவ் மற்றும் ஹைட்ரோகிராஃபிக் கப்பலான மனவனுய், சனிக்கிழமை இரவு உபோலுவின் தெற்கு கடற்கரைக்கு அருகில் பாறைகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கடலில் மூழ்கியது என்று நியூசிலாந்து பாதுகாப்புப் படையின் கடல்சார் கூறு கமாண்டர் கொமடோர் ஷேன் ஆர்ன்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
உயிர்காக்கும் படகுகளின் உதவியுடன் கப்பலில் மூழ்கித் தத்தளித்த பணியாளர்கள் மற்றும்பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ராயல் நியூசிலாந்து விமானப்படை P-8A Poseidon ரக விமானமும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
கப்பல் எப்படி மூழ்கியது என்பதற்கான காரணம் தெரியவில்லை, மேலும் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று நியூசிலாந்து பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அரசாங்கத்திற்கு NZ$103 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட Manawanui கப்பல் கடலில் மூழ்க முன்னர் அடர்த்தியான சாம்பல் புகையுடன் கூடியதாக இருந்ததாகவும் கப்பல் பின்னர் கவிழ்ந்து, உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் மேற்பரப்பிற்கு கீழே இருந்ததாக நியூசிலாந்து பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
சபா.தயாபரன்.