மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய மெக்சிகோவில் அதிவேக வீதியில் 3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீமெந்து ஏற்றிச்சென்ற டிரக் ரக வாகனம் வேனொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.