ரஷ்ய ஆக்கிரமிப்பு தெற்கு உக்ரேனிய நகரமான எனர்ஹோடரில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்புத் தலைவரான Andriy Korotkyy கொல்லப்பட்டதை ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்ப
டுத்தினர்.
"பாதுகாப்புத் தலைவரின் வாகனத்தின் கீழ் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது " என்று ரஷ்யாவின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் தலைவரான Andriy Korotkyy காரில் ஏறியதும், அது வெடித்தது. காயமடைந்த Andriy Korotkyy மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிட்சை பலனின்றி இறந்ததாக விசாரணைக் குழு கூறியது.
GUR என்றும் அழைக்கப்படும் உக்ரைனின் இராணுவ புலனாய்வு (Defense Intelligence of Ukraine ) இயக்குநரகம், கொரோட்கியைக் கொன்ற குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்று, அவரை "போர் குற்றவாளி" என்று அழைத்தது.
Korotkyy போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பின் கீழ் உக்ரேனியர்களை ஒடுக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள ஒரு ஒத்துழைப்பாளர்" என்று கூறியது,
அணுமின் நிலைய ஊழியர்களின் பட்டியலை "உக்ரேனிய சார்பு நிலையுடன்" ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
"ஒவ்வொரு போர் குற்றவாளிக்கும் ஒரு நியாயமான பழிவாங்கல் காத்திருக்கிறது," என்று நிறுவனம் மேலும் கூறியது.
2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உக்ரைனை ஆக்கிரமித்த சிறிது நேரத்திலேயே, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டை மாஸ்கோ எடுத்தது. இது 700,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஜபோரிஜியா நகரத்திலிருந்து தென்மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
உக்ரேனிய உளவுத்துறையின் கார் குண்டுவெடிப்பில் இறந்த முதல் ரஷ்ய நட்பு அதிகாரி கொரோட்கி அல்ல. ரஷ்ய சார்பு சட்டமியற்றுபவர் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள முன்னாள் போராளியான மிகைல் ஃபிலிபோனென்கோ கடந்த நவம்பரில்இதேபோன்ற தாக்குதலில் கொல்லப்பட்டார்.
சபா.தயாபரன்.