அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநொயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
82 வயதான ஜோ பைடன் 2021 முதல் 2025வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பைடன் பாதிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் வீரியமிக்க இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சைகள் உள்ளன ஆனால், இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குபின் அதிகபட்சமாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்தேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.