" நாம் காசாவைக் கைப்பற்றி அதைக் காலனித்துவப்படுத்த வேண்டும்,. காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும், ஒரு எதிரி. எதிரி ஹமாஸ் அல்ல ஒரு காசா குழந்தையைக்கூட அங்கே விட்டுவிடக்கூடாது. இதைத் தவிர வேறு எந்த வெற்றியும் இல்லை. "- என்று தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அரசியல்வாதி மோஷே ஃபீக்லின் புதன்கிழமை அறிவித்தார்.
இது சர்வதேச அரங்கில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல் "ஒரு தீய நாடாக மாறுவதற்கான பாதையில்" சென்று கொண்டிருக்கிறது என்றும், "ஒரு நல்லொழுக்கமுள்ள நாடு... ஒரு பொழுதுபோக்கிற்காக குழந்தைகளைக் கொல்லாது. உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு யூதருக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு ஆபத்து ஏற்படுகிறது" என்று கூறி சர்ச்சையைத் தூண்டினார் இடதுசாரி அரசியல்வாதி யெய்ர் கோலன்,
இது குறித்து நெதன்யாகு கோபமாக பதிலளிக்கையில் இது "நமது வீரமிக்க வீரர்களுக்கு எதிராகவும் இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும் மூர்க்கத்தனமான தூண்டுதல்" என்று கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள குழந்தைகள் இஸ்ரேலின் தீவிர குண்டுவீச்சு பிரச்சாரத்தின் மூலமாகவோ அல்லது 75 நாட்களுக்கு காசாவிற்குள் உணவு, தண்ணீர் மற்றும் பொருட்களை வழங்க மறுக்கும் முடிவின் மூலமாகவோ அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள குழந்தைகள் இஸ்ரேலின் தீவிர குண்டுவீச்சு தாக்குதலின் மூலமாகவோ அல்லது 75 நாட்களுக்கு காசாவிற்குள் உணவு, தண்ணீர் சென்றடையாவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் வரை இறந்துவிடுவார்கள் என்று இந்த வார தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
இதன் அழுத்தம் காரணமாக மே 19 அன்று, இஸ்ரேல் உணவு ஏற்றிச் செல்லும் மனிதாபிமான உதவி ஐந்து லாரிகளை காசாவிற்குள் செல்ல அனுமதித்தது, அங்கு சுமார் இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர் என்று பல உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு 500 உதவி லாரிகள் தேவைப்படும் என்று மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் "கடலில் ஒரு துளி" என்று விவரித்த சில உதவிகளை மீண்டும் தொடங்குவது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது.
முதன்மையாக போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச குற்றச்சாட்டுகளைத் தடுக்கவும், எங்கள் இராணுவ பிரச்சாரத்தை நிறுத்துவதைத் தவிர்க்கவும். அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே பொதுமக்களைச் சென்றடைவதை" இஸ்ரேல் உறுதி செய்யும் என்று வலதுசாரி இஸ்ரேலிய அரசியல்வாதியும் நிதியமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச் கூறினார்,
இங்கிலாந்து, ஜப்பான், கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட முக்கிய ஜனநாயக நாடுகளில் உள்ள தனது சகாக்களுடன் இணைந்து கையெழுத்திட்ட ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஒரு கூட்டு அறிக்கையில் மனிதாபிமான உதவியின் "புதிய மாதிரியை" ஆதரிக்க முடியாது என்றும் அது அரசியல் அல்லது இராணுவ நிலைமைகளுக்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது என்றும் கூறினார்.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் குறைந்தது 53,655 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 121,950 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசாவின் சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சபா.தயாபரன்.