ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது.
அத்துடன், பதிலடிக்காக ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் ஈரான் மேற்கொள்ளலாம் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி - அணுவாயுத இலக்குகளையும் இராணுவ இலக்குகளையும் தாக்குவதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.