" டொலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முற்பட்டால் கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
'பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக இருந்தாலும், விரைவில் 10 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. டொலரை சீரழிக்கவும் அமைக்கப்பட்டது.
எது எப்படி இருந்தாலும் டொலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. நாங்கள் அதை அப்படியே வைத்திருக்கப் போகிறோம். அதற்கு சவால் விட விரும்பினால், அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்." - எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.