ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கனடா பொருள்களுக்கு 35 சதவீத வரி அமுலுக்கு வரும என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2ம் திகதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், ஜூலை 9ம் திகதி வரை இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் அவர், அனைத்து நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கான கெடுவை ஆகஸ்ட் 1ம் திகதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், " அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதில் கனடா தோல்வி அடைந்துவிட்டது.
இதனால் கனடா பொருட்களுக்கு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்புகளை கனடா எற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும்." - என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.