இந்தியாவும், பாகிஸ்தானும் இராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு விருந்தின்போது கருத்து வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப்,
“இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது, போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4 அல்லது 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. ஆனால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். ஏனெனில், நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருந்தது. இல்லையா?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொள்வதில் முன்னும் பின்னுமாக இருந்தன. அது பெரிதாகிக்கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் நாங்கள் அதை முடிவுக்குக்கொண்டு வந்தோம். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்வீர்கள் எனில், குறிப்பாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் உங்களுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என கூறினேன். ஏனெனில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த அணுஆயுத நாடுகள்.
8 ஆண்டுகளில் எந்த அமெரிக்க நிர்வாகமும் சாதிக்க முடியாததை ஆறு மாதங்களில் நாங்கள் சாதித்துள்ளோம். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம். இவை கடுமையான போர்கள்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தத்துக்கு தாங்களே காரணம் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக 5 ஜெட் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழத்தி இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் புதிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அந்த 5 ஜெட் விமானங்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமானவை என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 5 ஜெட் விமானங்களால் ஏதேனும் ஒரு நாடு பாதிக்கப்பட்டதா அல்லது இரண்டு நாடுகளுமே பாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.