இராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் மியன்மாரில், ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகி உள்ளது.
அதன்படி வருகிற டிசம்பர் 28 ஆம் திகதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளார்.