பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு பதவி விலகியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்று, வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தெரிவுசெய்யப்பட்டார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.
இந்த நிலையில்தான், புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது அரசியலில் விமர்சனத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும், சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இந்த நிலையில்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரான்சின் பொதுக்கடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. ஜடிபியில் கடன் விகிதம் கிரீஸ், இத்தாலிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றத்தில் பிரான்சில்தான் மோசமான நிலையை எட்டியுள்ளது.
ஓராண்டு காலப்பகுதிக்குள் பிரான்ஸில் 4 பிரதமர்கள் பதவி விலகியுள்ளமை அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.