ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் பலவும் போட்டி போடுகின்றன. இதற்கு இணையாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கான போட்டியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 11-வது சோதனை முயற்சியாக மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக அனுப்பியது.
இது முன்பு போலவே 8 போலி செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது. பின்னர் திட்டமிட்டபடி மெக்சிகோ வளைகுடாவில் நுழைந்து இந்திய பெருங்கடலில் விழுந்தது.
123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்படுகிறது. இந்த ரொக்கெட் சோதனையின் வெற்றி, விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்த ரொக்கெட் மூலமாகவே, இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.