- ஐங்கரன் விக்கினேஸ்வரா-
( சீனா உலகின் மிகப்பெரிய அரிய மண் இருப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் அவுஸ்திரேலியாவிலும் குறிப்பிடத்தக்க இருப்புக்கள் உள்ளன. மேற்கத்திய அரசாங்கங்கள், அரிய மண் மற்றும் சிறிய உலோகங்களுக்காக சீனாவை நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர போராடி வருகிறது.
அவுஸ்திரேலியா அதன் திட்டமிடப்பட்ட மூலோபாய கனிம இருப்புக்களில் பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு பங்குகளை விற்க தயாராக உள்ளது.
இதேவேளை பெய்ஜிங்கின் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது)
அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் கனிம ஒப்பந்தத்தில் (USA - Australia rare earth deal) கையெழுத்திட்டதால் சீனா மீண்டும் தனது உலகளாவிய விநியோகத்தை இறுக்கி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன், இந்த ஒப்பந்தம் பற்றி கடந்த நான்கு முதல் ஐந்து மாதங்களாக ஆஸி அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையே அரிய கனிம வளங்கள் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிய கனிம வளங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தம் மூலம், அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவையான கனிமங்களை உறுதி செய்வதோடு, இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பையும் மேம்படுத்தும்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த ஆறு மாதங்களுக்கு அரிய கனிம சுரங்கங்கள் மற்றும் அதன் செயலாக்கத் திட்டங்களுக்கு, இரு அரசும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்கு சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், மாற்று வழியாக இந்தப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சீன அரசின் நடவடிக்கைக்கு அதிபர் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது கூடுதலாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஸி - அமெரிக்க ஒப்பந்தம்:
டொனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் (AUKUS) குறித்தும் இந்த வாரம் அமெரிக்க தலைநகரில் கலந்துரையாடி உள்ளனர்.
புதிய வல்லரசாக உருவாகும் சீனா உலகளாவிய விநியோகத்தில் கட்டுப்பாட்டை இறுக்குவதால், அமெரிக்கவும, அவுஸ்திரேலிய அரசும்
முக்கியமான கனிமங்கள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இரு தலைவர்களும் அக்டோபர் 20 திங்களன்று வெள்ளை மாளிகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில்
வர்த்தகம், நீர்மூழ்கிக் கப்பல்கள்,
இராணுவ உபகரணங்கள் குறித்து தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, சீனா உலகின் மிகப்பெரிய அரிய மண் இருப்புகளைக் (China’s rare earth export controls) கொண்டுள்ளது. ஆனால் அவுஸ்திரேலியாவிலும் குறிப்பிடத்தக்க இருப்புக்கள் உள்ளன. அத்துடன் மேற்கத்திய சுரங்கத் தொழிலாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வரும் முக்கியமான கனிமங்களுக்கான குறைந்தபட்ச விலை தளத்தையும் அவர்கள் நிர்ணயித்தனர்.
2023 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் எட்டப்பட்ட 239.4 பில்லியன் டாலர் AUKUS ஒப்பந்தத்தைப் பற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதன்படி அவுஸ்திரேலியா 2032 ஆம் ஆண்டு பிரிட்டனுடன் ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பல் வகுப்பைக் கட்டுவதற்கு முன்பு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் திட்டத்தை செயல்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் மூன்று தரப்பினருக்கும் அசல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், முந்தைய ஒப்பந்தத்தில் இருந்த சில தெளிவின்மையை தெளிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் ஃபெலன் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் இவை சிறிய விவரங்கள் என்று அதிபர் டிரம்ப் கூறினார். இன்னும் எந்த விளக்கங்களும் இருக்கக்கூடாது. ஏனென்றால் நாங்கள் இப்போது முழு வீச்சில் முன்னேறி வருகிறோம், கட்டுமானத்தில் இருக்கிறோம் என்று டிரம்ப் கூறினார். அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் தொடரும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.
ஆஸி பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் தொடர்பான மதிப்பாய்வு எப்போது முடிவடையும் என்று தனக்குத் தெரியும் என்று கூறினார்.
சீன அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடு:
சீனாவின் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் (China’s rare earth export controls) குறித்தும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. திங்கட்கிழமை சந்திப்புக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அதிகாரிகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு இராணுவ கூட்டாண்மையான AUKUS இன் கீழ் கான்பெர்ரா தனது பங்களிப்பை செலுத்தி வருவதாக வலியுறுத்தினர்.
இது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளங்களில் உற்பத்தி விகிதங்களை அதிகரிக்க இந்த ஆண்டு $2 பில்லியன் பங்களிப்பை வழங்குகிறது. மேலும் 2027 முதல் அதன் இந்தியப் பெருங்கடல் கடற்படை தளத்தில் அமெரிக்க வர்ஜீனியா வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை பராமரிக்கத் தயாராகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து
பத்து மாதங்கள் தாமதமாக ஆஸி பிரதமரை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளிடையே சில பதட்டங்கள் நிலவி வந்தாலும், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மேற்கத்திய அரசாங்கங்கள், அரிய மண் மற்றும் சிறிய உலோகங்களுக்காக சீனாவை நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர போராடி வருவதால், அவுஸ்திரேலியா அதன் திட்டமிடப்பட்ட மூலோபாய கனிம இருப்புக்களில் பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு பங்குகளை விற்க தயாராக உள்ளது.
இதேவேளை பெய்ஜிங்கின் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் கடந்த வாரம் கண்டனம் தெரிவித்தனர். மின்சார வாகனங்கள் முதல் விமான இயந்திரங்கள் மற்றும் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளுக்கு இன்றியமையாத பொருட்களை சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகக் கொண்டுள்ளது.
ஆனாலும் வளங்கள் நிறைந்த அவுஸ்திரேலியா, அரிய மண் தாதுக்களை பிரித்தெடுத்து செயலாக்க விரும்புகிறது. ஏப்ரல் மாதம் நடந்த அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அதன் மூலோபாய இருப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வாய்ப்பை வழங்க ஆஸி அரசு திட்டமிட்டுள்ளது.