பிரிவினைவாதிகள் தமிழ்நாட்டில் பழமைவாத கருத்துகளைப் பரப்பி நமது மக்களை சுரண்டி கடந்த 60 ஆண்டுகளாக சுயமாக மற்றும் மரியாதையாக கொள்ளையடிக்க தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை இந்த மாதம் வெகுவிமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள்.
இவர்களின் சுயமரியாதை இயக்கம் என்பது இவரது தலைவரான ஈரோடு வெங்கட்டர் இராமசாமி நாயக்கர் - தனக்கு தானே சூடிக்கொண்டது தான் ( அந்தக்கால காங்கிரசு தலைவர்கள் மத்தியில் பிராமணர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து வெளியே வந்து இவரே சுயமாக வெளியே வந்து தனக்குரிய மரியாதையை தானே தனக்கு வழங்கி ஆரம்பித்து வைத்தது என்று வரலாறு சொல்கிறது ) . "சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் (?) அறிந்ததேயாகும்".
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர் என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. “ - ஈ .வெ .ரா - இந்துமத பண்டிகைகள் நூலில் கூறியது. தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கங்கள் 100 வருடம் வளர்ந்த பிறகும் எல்லோராலும் ( கழக தலைவர்களின் வீட்டிலும் ) கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி எல்லோருக்கும் முந்தி முதன்மையாக வாழ்த்து சொல்வதும் இவர்களே - சுயம் அறியாதை 100
கடந்த 55 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் ஆட்சியில் ( இதில் 100 வருட சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகமும் சேர்த்து ) – யாராவது ஒரு தலைவரையாவது, ஒரேயொரு ஆளைப் பற்றியாவது – நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் மட்டுமேதான் அவர்களிடம், அவர்கள் குடும்பத்தினரிடம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? தனது பதவி காலத்தில் எந்தவிதமான ஊழலையும் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? அவர்கள் கூட்டத்தில் 0.0000000001% அளவேகூட, ஒரேயொரு கக்கனையோ, காமராஜையோ, ராஜாஜியையோ, பக்தவத்சலத்தையோ காண்பிக்க முடியுமா? - சுயம் அறியாதை 100
சாதிகளை ஒழிக்க நாங்கள் போராடினோம். எங்கள் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ந்த போராட்டம் மூலமே ஜாதி வெறி ஒழிந்திருக்கிறது என்பது என்பது 100 ஆண்டு கால பொய். இவர்கள் தலைவர் அவரது கழகத்தை விட்டு வெளியே சென்று அவரை எதிர்த்தவர்களை பற்றி இவ்வாறு சொல்கிறார் . " எனக்கும் ,எனது தொண்டிற்கும் எதிரிகளாக பலபேர் இருக்கின்றனர். இதெற்கெல்லாம் காரணம் நமது ஜாதி பிறவித்தன்மை தான் காரணம் என்று சொல்லவேண்டியதைத் தவிர எனது 40 வருட பொதுத் தொண்டின் அனுபவத்தில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை" - சுயம் அறியாதை 100
ஈவெரா கீழ்வெண்மணி விஷயத்தில் எந்த அளவுக்கு சுயமரியாதையுடன் நடந்து கொண்டார் என்பது அவர் வெளியிட்ட அறிக்கையே சாட்சி . அவரிடம் இருந்ததெல்லாம் பார்ப்பன வெறுப்பு . இந்த வெறுப்பு அரசியல் செய்தார் தவிர அவர் தாழ்த்தப்பட்ட மனிதர்களுக்கு அவர் என்றும் சார்பாக இருந்ததில்லை என்பது அவரது கீழ்வெண்மணி குறித்த அறிக்கை மூலம் தெரிந்துகொள்ளமுடியும். அதாவது சுயமரியாதை என்பது தான் சார்ந்த இடைநிலைச் சாதியினை விட்டுக்கொடுக்காமல் இருப்பது மட்டுமே . “‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.” - சுயம் அறியாதை 100
இவர்கள் விடும் மற்றுமொரு புரட்டு - பெண்விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தினால் மட்டுமே சாத்தியமானது என்று. பெண் விடுதலைக்காக தமிழகத்தில் குரல் கொடுத்தவர்கள் பல பேர் . பாரதி ,திரு.வி.க என்று பல நூறு உதாரணங்களை சொல்ல முடியும். இவர்கள் பெண் விடுதலை ,சமத்துவம் என்று வாய் கிழிய கத்துகிறார்களே . இவர்களது எல்லா இயக்கங்களிலும் பெண்களுக்கு சரிசமமாக பதவிகளை கொடுத்திருக்கிறார்களா ?. அதை விடுங்கள் அனைத்து தகுதி இருந்தும் கனிமொழி கருணாநிதியை ஒதுக்கி ,தனது வாரிசுக்கு மட்டுமே பதவி கொடுத்து அழகு பார்ப்பதில் எங்கே பெண் சமத்துவம் இருக்கிறது ? - சுயம் அறியாதை 100
சுயமரியாதை இயக்கம் என்பது இந்து மத மூடநம்பிக்கைகளையும், பிராமணியத்தையும் இந்து மத இதிகாசமான இராமாயணத்தை எதிர்ப்பது மட்டுமே. ராமர் படத்தை எரிப்பது ,இந்து மதக்கடவுள்களைப் பற்றி நாக்கூசும் படி பேசுவது மட்டுமே இவர்களின் வேலை.பிற மதங்களைப் பற்றி இவர்கள் என்றும் விமர்சிப்பதில்லை. அது மட்டுமின்றி ரம்ஜான் காலத்தில் நோன்புகஞ்சி குடிப்பது, கிறிஸ்துமஸ் சமயத்தில் பேராயர்களுடன் சேர்ந்து கொண்டு வாழ்த்து தெரிவிப்பது எல்லாம் கடவுள் மறுப்பு ஆகும். - சுயம் அறியாதை 100
சுயமரியாதை இயக்கம் என்பது தமிழகத்தில் அன்றைய காங்கிரசில் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வந்து தங்கள்
(இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கத்திற்காக ) சுயநலத்திற்காக ஆரம்பித்த இயக்கமாகும். பெண் விடுதலை ,சமூகநீதி ,தீண்டாமை ஒழிப்பு எல்லாம் பெயரளவில் மட்டுமே. மற்ற நல்ல தலைவர்களின் தொடர்ந்த போராட்டத்தினால் கிடைத்த நன்மைகளை எல்லாம் எங்களால் தான் கிடைத்தது என்று காலங்காலமாக பொய் ,புரட்டு ,கயமைவாத இயக்கத்தின் பெயரால் தமிழ்நாட்டில் பல பேரின் சுயமரியாதை இழந்து நிற்கும் நிலை தான் உள்ளது.
2009 ஆம் ஆண்டில் தன் இனம் அழிந்துகொண்டிருக்கும்போது திறம்பட நாடகங்கள் நடத்தி தங்கள் சுயத்தையும் ,மரியாதையையும் இழந்து நின்றதை தமிழ் அன்னை என்றும் மறக்க மாட்டாள் .