எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த ஈரான் முயன்றால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே அமெரிக்கா அழித்துவிடும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.
" ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து எனது ஆலோசகா்களுக்கு மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
எனக்கு ஏதாவது நோ்ந்தால், ஈரான் என்ற ஒரு நாடு இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளம் இல்லாதபடி ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியப்படும்’ என்றாா்.
டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடா்பாளா் ஜெனரல் அபுல் பாஸல் ஷெகாா்ச்சி அளித்த பதிலில்,
" எங்கள் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால், அந்த கையை நாங்கள் வெட்டுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் உலகத்தையே தீக்கிரையாக்குவோம்’ என்று எச்சரித்துள்ளாா்.
ஈரானில் தற்போதைய மதசாா்பு ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால், இருநாட்டுக்கிடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.