ஸ்பெயினில் வரலாறு காணாத - மிக மோசமான வெள்ளத்தால் 200 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் தெரியவருகின்றது.
பெரும்பாலான இறப்புகள் வலென்சியா பிராந்தியத்தில் நிகழ்ந்தன. ஆனால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகின்றது.
வெள்ளம் பாலங்களை அழித்து சேற்றால் நகரங்களை மூடியது. துண்டிக்கப்பட்ட இடங்களில் தண்ணீர், உணவு அல்லது மின்சாரம் இல்லாமல் இருக்கிறது. மோசமான வானிலை தற்போது வலென்சியா மற்றும் மத்திய தரைக்கடல் கடற்கரையை கடந்துள்ள நிலையில், தெற்கு ஸ்பெயினில் வெள்ள எச்சரிக்கைகள் தொடர்ந்தும் உள்ளன, சனிக்கிழமையில் மேலும் கடுமையான மழை வீழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ர்ரநடஎய பகுதியும் இதில் அடங்கும். கார்டயா நகரில் வெறும் 10 மணி நேரத்தில் இரண்டு மாத மழை பெய்திருந்தது.
ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தற்போது ஸ்பானிய இராணுவம் மற்றும் அவசரகால சேவைகளுக்கு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவி வருகின்றனர், மேலும் 500 துருப்புகள் வலென்சியா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வலென்சியாவின் பிராந்திய தலைவர் கார்லோஸ் மசோன் கூறினார்.
ஸ்பெயினின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் தன்னார்வலர்களின் சேவையை "ஒற்றுமையின் எடுத்துக்காட்டு மற்றும் ஸ்பானிஷ் சமூகத்தின் வரம்பற்ற அர்ப்பணிப்பு" என்று கூறி பாராட்டினார்.
சபா.தயாபரன்