பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது.
அங்கு நடைபெறும் தேர்தல் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது.
தேர்தலில் ஆயிரத்து 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக களமிறங்கியுள்ளனர்.
12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இன்று காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
பங்களாதேஷில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
பெப்ரவரி 12 ஆம் திகதி (இன்று) பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி Muhammad Yunus தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்கதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.
ஷேக் ஹசீனாவின் Sheikh Hasina அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.