சிட்னியில் 15 வயது சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 37 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவரை அவர் வெட்டிப்படுகொலை செய்துள்ளார்.
அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், பிணை மறுக்கப்பட்டுள்ளது.
காம்ப்பெல்டவுனுக்கு தெற்கே வில்டனில் உள்ள வில்டன் பார்க் சாலையில நிலத்தில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து சனிக்கிழமை , 37 வயதுடைய ஜேக்கப் கிரேக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
15 வயது சிறுவனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்நபர், அவரை கத்தியால் வெட்டிய பின், ஒதுக்குப்புறமான புதருக்குள் விட்டுச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜேக்கப் கிரேக் ஞாயிற்றுக்கிழமை பரமட்டா உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
சனிக்கிழமை காம்ப்பெல்டவுனுக்கு தெற்கே உள்ள வில்டனில் உள்ள வில்டன் பார்க் சாலையில் உள்ள புதர் நிலத்தில் ஒரு டீனேஜ் பையனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து சனிக்கிழமை காலை 7.25 மணியளவில் வில்டன் பார்க் சாலைக்கு விரைந்த அவசர சேவைகள் டீன் ஏஜ் பையனைக் கொன்றதன் பேரில் 37 வயதுடைய ஜேக்கப் கிரேக் என்பவரைக் கைது செய்தனர்.
15 வயது சிறுவனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரை கத்தியால் வெட்டிய பின், அவரை ஒதுக்குப்புறமான புதருக்குள் விட்டுச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜேக்கப் கிரேக் ஞாயிற்றுக்கிழமை பரமட்டா உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
எந்த நோக்கத்திற்காக இந்த கொலை நடைபெற்றது என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர்.
சபா.தயாபரன்