தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
பேங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தின் பாங் குருவாய் (Bang Kruai) மாவட்டத்தில் அமைந்துள்ள 'டெப்சிரின் நொந்தபுரி' பாடசாலையில் (Debsirin Nonthaburi School) வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் அந்தப் பாடசாலையின் மாணவர் ஒருவரே என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தாய் என்குவையரர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, அதிகாரிகள் பாடசாலை வளாகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.