மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சான் சால்வடாரில் இருந்து தென்கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள லா யூனியன் டிபார்ட்மெண்டில் கான்சாகுவா மாவட்டத்திற்கு தெற்கே 9 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்தது.எல் சால்வடாரின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுப்படி நிலநடுக்கத்தின் ஆழம் 15.4 கி.மீ. ஆக இருந்தது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அமைப்பின் படி, தோராயமாக 12,000 பேர் மிகவும் வலுவான நடுக்கத்திற்கு ஆளாகியுள்ளனர், அதே நேரத்தில் 97,000 பேர் வலுவான நடுக்கத்தை அனுபவித்தனர். முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 3.5 முதல் 3.9 வரையிலான மூன்று கூடுதல் நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டன.
உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் பற்றிய ஆரம்ப அறிக்கைகள் எதுவும் இல்லை.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
புவித்தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகு தியில் எல் சால்வடார் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்க அபாயம் மிகவும் அதிகமாக ஏற்படுவதாக அறியப்படுகின்றது.
சபா.தயாபரன்.