சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்ட பிறகு, கிளர்ச்சியாளர்கள் மொஹமட் அல்-பஷீரை மார்ச் 1 வரை நாட்டை இயக்க இடைக்கால அரசாங்கத் தலைவராக நியமித்துள்ளனர் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சிரிய பிரதமராக பதவியேற்ற மொஹமட் அல்-பஷீர் "இப்போது இந்த மக்கள் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை அனுபவிக்க வேண்டிய நேரம் இது," என்று வலியுறுத்தினார்.
சிரியாவின் எதிர்கால அரசாங்கம் "நம்பகமான, உள்ளடக்கிய மற்றும் குறுங்குழுவாதமற்றதாக" இருக்க வேண்டும் . சிறுபான்மையிரின் உரிமைகளை முழுமையாக மதிக்க தெளிவான உறுதிமொழிகளை நிலைநிறுத்த வேண்டும்.
மற்றும் மனிதாபிமான உதவியை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் ஏறக்குறைய 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் 500,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நாட்டின் பாதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர்களில் மில்லியன் கணக்கானவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக சிரியா மீது இஸ்ரேல் தொடுத்த நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் மூலம் சிரியாவின் மிக முக்கியமான இராணுவ தளங்களை அழித்துவிட்டன" என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட கண்காணிப்பு அமைப்பு கூறியது. நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் சிறப்பு தூதர் பெடர்சன், இஸ்ரேலை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள், அதே நேரத்தில் அதன் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டைத் தடுப்பார்கள்" என்று நம்புவதாக லெபனானின் ஹிஷ்புல்லா அமைப்பு கூறியது.
சபா.தயாபரன்.