2024 ஆம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோபர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் கிறிஸ்டியன் எய்ட் என்ற அரச சார்பற்ற் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் மிகப்பெரிய பேரழிவுகள் ஏற்படவில்லை என்றாலும், வட அமெரிக்காவில் நான்கு, ஐரோப்பிய நாடுகளில் மூன்று என பேரழிவுச் சம்பவங்கள் நடந்தன. மீதமுள்ள 3 பேரழிவுச் சம்பவங்கள் சீனா, பிரேசில், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டன.
இந்த சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கிறிஸ்டியன் எய்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவுச் சம்பவம் இடம்பெறவில்லை. கடந்த ஜூலையில் நடந்த இந்த பேரழிவுச் சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.