அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்திற்குள் அதிவேகத்தில் ஒரு கார் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதியது.
இந்த சம்பவத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர் எனவும், 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வேகமாக கூட்டத்தில் மோதிய காரின் சாரதி, திடீரென தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுடத்தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.