கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ, விரைவில் பதவி விலகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகல் குறித்து அவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றபோதிலும், அது பற்றி தீவிரமாக பரிசீலித்துவருகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒன்பது வருடகாலம் பிரதமராக பதவி வகித்துள்ள நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி தோல்வியடையும் என தெரிவிக்கின்ற சூழ்நிலையில் கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய கூட்டமொன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அவசர கூட்டத்திற்கு முன்னதாக பதவி விலகும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.