இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் உள்ள காடுகளுக்குள் நக்சலைட்டுக்கெதிராக இந்திய பாதுகாப்புப் படையினரால் தாக்குதல் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு உயர் கிளர்ச்சித் தலைவர் உட்பட குறைந்தது 14 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகவும் இறந்தவர்களில் எட்டு பேர் ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்
இது ஒரு வாரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட இரண்டாவது பெரிய பின்னடைவு என்று கருதப்படுகின்றது.
இறந்தவர்களில் ஒருவர் ஜெய்ராம் என்றழைக்கப்படும் சல்பதி என்றும், அவர் கண்டு பிடிக்க சன்மானமாக ₹1 கோடி பரிசுத் தொகை இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது என்று சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிகில் ரகேச்சா கூறினார்.
60 வயதான சலபதி, 2003 அக்டோபரில் திருப்பதியில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளேமோர் சுரங்கத் தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். மெட்ரிகுலேஷன் படித்த சலபதி, 1980களில் மாவோயிஸ்டுகளில் சேர்ந்து தங்கள் அணிகளில் உயர்ந்தார்.
பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் முக்கிய மூலோபாயவாதியாகக் கருதப்படும் அவர், அபுஜ்மத் பகுதியில் நடந்த தீவிர மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க சமீபத்தில் ஒடிசா எல்லைப் பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக இந்த விஷயத்தை அறிந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீதமுள்ளவர்கள் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
சபா.தயாபரன்