அமெரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை, அதற்கு எதிராக கூச்சலிட்டுள்ள கனடாவின் ஹொக்கி இரசிகர்கள், தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்வனவு செய்யப்போவதாக உறுதியேற்றுள்ளனர்.
ஒட்டாவாவில் அமெரிக்கா மற்றும் கனடா ஹொக்கி அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அமெரிக்க தேசியகீதம் இசைக்கப்பட்டவேளையிலேயே கனடா ரசிகர்கள் உரத்த குரலில் இவ்வாறு கூச்சலிட்டுள்ளனர்.
கனடாவிற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரிகளை அறிவித்து ஒரு சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இரு நாடுகளினதும் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியின் போதும் கனடா இரசிகர்கள், அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை கூச்சலிட்டுள்ளனர்.
வழமையாக அமைதியான முறையில் நடந்துகொள்ளும் கனடா ரசிகர்கள்,ட்ரம்பின் வரிகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாலேயே இவ்வாறு செயல்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.