NAIDOC வார கொண்டாட்டம்

Australia 2 ஆண்டுகள் முன்

banner

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டோரஸ் ஸ்டெரெயிட் தீவுகள் மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக, ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம், முதல் ஞாயிறு முதல் அடுத்த ஞாயிறு வரை, ‘‘NAIDOC thuk’ வாரம் நாடு தழுவிய அளவில் அனுசரிக்கப்படுகிறது.





ஒரு வாரம் முழுவதும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில், பழங்குடிச் சமூகங்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ஆஸ்திரேலியர்களும் கலந்து கொண்டு நடைபெறும் விழாவாக NAIDOC  வாரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. 





 NAIDOC  வரலாறு 





1938 முதல் 1955 வரை, ஜுலை முதல் ஞாயிற்றுக்கிழமை, தேசிய பழங்குடிகள் தினமாகவும், தேசிய துக்க நாளாகவும் (Day of Mourning) அனுசரிக்கப்பட்டு வந்தது. 





1991-ற்குப் பிறகு, ஆஸ்திரேலியப் பழங்குடியினருடன் இணைந்து, டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் தனித்துவமான கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் வகையில், NAIDOC (National Aborigines and Islanders Day Observance Committee)  அதாவது, தேசியப் பழங்குடியினர் மற்றும் தீவுவாசிகள் தினக் கண்காணிப்புக் குழு எனப் பெயர் பெற்றது. 





இவர்களின் வரலாற்று மற்றும் கலாச்சாரத்தைப் பொதுமக்களுக்குப் புரிய வைக்கவும், அங்கீகாரத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு நாள் மட்டுமல்லாமல், ஒரு வாரக் கொண்டாட்டமாக உருவெடுத்தது.  





இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக (Theme) 'நாட்டைக் குணமாக்கு' ( HEAL COUNTRY) என்கிற வாக்கியம் விழாக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நிலங்கள், நீர்நிலைகள், பூர்வீக இடங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என வலியுறுத்துவதே இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆகும்.





நாம் ஏன் NAIDOC  வாரம் கொண்டாட வேண்டும்? 





புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாட்டைச் சார்ந்த அல்லது கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள், தற்பொழுது குடியிருக்கும் ஆஸ்திரேலியாவில் 50,000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும் பழங்குடியினர் மற்றும் தீவுவாசிகள் மற்றும் அவரது தனித்துவக் கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் முழுவதுமாக இல்லை. மேலும், மேற்கத்தியர் வருகையாலும், காலணித்துவ அடக்கு முறையாலும் 250 ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறைக்கு உட்பட்ட ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளின் வரலாறும், சாதனைகளும் ஒரு சிலருக்கே தெரிந்திருக்கிறது. ‘ஆஸ்திரேலிய நாள்’ (Australia Day) கொண்டாட்டங்களில் பங்கேற்பது போல், பழங்குடியின மக்களின் நிகழ்வுகளை அங்கீகரிப்பதும் இல்லை.





ஆதலால், NAIDOC  வாரமானது, ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளின் கலாச்சார மற்றும் நிலம் சார்ந்த அறிவுகளைப் புரிந்து கொள்ளவும், அடக்குமுறையில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர்களை சமமான முறையில் நடத்தவும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறைகளுக்கு நீதி பெற்றுத் தரவும் பயனுள்ளதாக இருக்கும். 





ஒவ்வொரு ஆண்டும், மாநில மற்றும் தேசிய அளவில் மிகப் பெரும் கொண்டாட்டமாக, NAIDOC  வாரம் மாறி வருவது மகிழ்ச்சிக்குரியது.





நாமும், நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், ஆஸ்திரேலிய பழங்குடியினர் பற்றியும், அவர்களின் இதுதகைய கொண்டாட்டங்கள் பற்றியும் உரையாடுவது, அல்லது, உங்கள் பகுதியில் நடைபெறும் NAIDOC  வாரக் கொண்டாட்டத்தில் நேரடியாகவோ, காணொளி மூலமாகவோ பங்கு பெறுதல் அவசியம் ஆகும்.





 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டோரஸ் ஸ்டெரெயிட் தீவுகள் மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக, ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம், முதல் ஞாயிறு முதல் அடுத்த ஞாயிறு வரை, ‘NAIDOC வாரம்’ நாடு தழுவிய அளவில் அனுசரிக்கப்படுகிறது.





ஒரு வாரம் முழுவதும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில், பழங்குடிச் சமூகங்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ஆஸ்திரேலியர்களும் கலந்து கொண்டு நடைபெறும் விழாவாக NAIDOC வாரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. 





1938 முதல் 1955 வரை, ஜுலை முதல் ஞாயிற்றுக் கிழமை, தேசிய பழங்குடிகள் தினமாகவும், தேசிய துக்க நாளாகவும் (Day of Mourning) அனுசரிக்கப்பட்டு வந்தது. 





1991-ற்குப் பிறகு, ஆஸ்திரேலியப் பழங்குடியினருடன் இணைந்து, டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் தனித்துவமான கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் வகையில், NAIDOC (National Aborigines and Islanders Day Observance Committee), அதாவது, தேசியப் பழங்குடியினர் மற்றும் தீவுவாசிகள் தினக் கண்காணிப்புக் குழு எனப் பெயர் பெற்றது. 





இவர்களின் வரலாற்று மற்றும் கலாச்சாரத்தைப் பொதுமக்களுக்குப் புரிய வைக்கவும், அங்கீகாரத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு நாள் மட்டுமல்லாமல், ஒரு வாரக் கொண்டாட்டமாக உருவெடுத்தது.





கோகுலன் 





சிட்னி