அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள்

Sri Lanka 1 வருடம் முன்

banner

பதுளை மாவட்டத்துக்கு மேலும் இரு லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளும், நுவரெலியா மாவட்டத்துக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கைக்கு இன்று 20 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் வந்தடைந்தன.

இவற்றில் குருணாகல் மாவட்டத்துக்கு 4 லட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்துக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகளும், அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

மாத்தறை, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தலா 2 லட்சம் தடுப்பூசிகள் வீதமும், புத்தளம், நுவரெலியா, மொனறாகலை, பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.