இலங்கையையும் மிரட்டுகிறது கருப்பு பூஞ்சை நோய்

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கையில் கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.





கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.





கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்திற்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், கொவிட் தொற்றாளர்களுக்கு மத்தியில் இந்த நோய் தாக்கத்திற்குள்ளானோர் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.





எனினும், ஒரு தொகுதியினருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிடுகின்றார்