பாரிஸ் நகர மருத்துவமனையில் பணியாளர் தீக்குளிக்க முயற்சி

banner

பாரிஸ் சென்.லூயி மருத்துவமனையின் அதிகாரி தரத்திலான ஆண் பணியாளர் ஒருவர் நேற்றுப்பகல் தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டார்.





மருத்துவமனையில் சக பணியாளர்களுக்கு முன்பாக உடலில் பெற்றோல் ஊற்றித் தீயை மூட்டிய அவர் பலத்த எரிகாயங்களுடன் உயிராபத்தான கட்டத்தில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.





நிர்வாகச் செயலாளராகப் பதவி வகித்த 47 வயதான ஆண் ஒருவரே இவ்வாறுதற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.





அதனால் சக பணியாளர்கள் பெரும்அதிர்ச்சி அடைந்தனர். உடலின் 50 வீதமான பகுதிகள் எரிந்த நிலையில் அவர்
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.





அவரது செயலுக்கான காரணம் என்ன என்பது தெரியவரவில்லை. சில நாட்களாக அவர் மனப்பாதிப்புக்குள்ளாகிய
வராகக் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.





கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப்பின்னர் சுகாதாரப் பணியாளர்கள் பலர் பணிச் சுமை மற்றும் தொழில் சூழ்நிலை
காரணமாகப் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். பலர் பணி விலகி உள்ளனர்.தாதியர் பற்றாக்குறை காரணமாக
மருத்துவமனை வார்டுகள் சில மூடப்பட்டுள்ளன.





குமாரதாஸன், பாரிஸ்