'வடகொரியா அச்சுறுத்தலிலிருந்து ஜப்பானை காக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது'

World 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





வட கொரியா மற்றும் சீன அச்சுறுத்தல்களிலிருந்து ஜப்பானை பாதுகாக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக ஜப்பானிய பிரதமர் பியூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.





முன்னெப்போதுமில்லாதவாறு சீனாவினதும் வடகொரியாவினதும் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்





வடகொரியா நீண்ட தூர ஏவுகணைகளை பரீட்சித்து வருகிறது. அதேவேளை சீனாவும் தனது இராணுவ கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தளங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.





இன்று சனிக்கிழமை வடக்கு டோக்கியோவிலுள்ள இராணுவ தளத்தில் 800 சுய பாதுகாப்பு இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.





ஜப்பானைச்சூழவுள்ள பாதுகாப்பு விஞ்ஞான புனைகதைகளில் வருவது போன்று உள்ளது. மக்களை பாதுகாப்பதற்கும் அமைதியை பேணுவதற்கும் தொடர் கலந்துரையாடல்களில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முன்னாள் பிரதமரும் தற் போதைய எதிர்கட்சித்தலைவருமான ஷின்சோ அபேயிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக நிதியை பாதுகாப்புக்கு 53.2 பில்லியன் டொலர் ஒதுக்கியுள்ளார்.