மூவரின் உயிர்களை பலியெடுத்த 15 வயது மாணவன் - அமெரிக்காவில் பயங்கரம்

World 1 வருடம் முன்

banner

ந. பரமேஸ்வரன்

அமெரிக்காவின் மிச்சிகான் மாநிலத்தில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 12,51 இற்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் முறையே 17,16,14 வயதுள்ளவர்கள். கொலையாளியின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை கொள்வனவு செய்த கைத்துப்பாக்கியாலேயே இந்த கொலைகளை மேற்படி மாணவன் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவன் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதும் தங்கள் மேசைகளின் கீழ் ஒளித்திருந்ததாக ஏனைய மாணவர்கள் விபரித்தனர்.

சம்பவத்தையடுத்து ஒரு சில நிமிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொலையாளி சரணடைந்துள்ளார்.

தானியங்கி கைத்துப்பாக்கியிலிருந்து 7 ரவைகள் பாய்ந்துள்ளன. கொலையாளி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவதாகவும் பொலிஸாருக்கு எதுவுமே கூறாமல் முரண்டு பிடிப்பதாகவும் பெற்றோ ரிடமும் பொலிஸாருக்கு எதுவுமே கூற வேண்டாமென பெற்றோரிடம் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.