சீனா -லாவோஸுக்கிடையில் அதிவேக ரயில் சேவை ஆரம்பம்

World 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





சீனா, சீனாவுக்கும் லாவோஸுக்குமிடையிலான நேரடி அதிவேக புகையிரதசேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த திட்டத்தில் சீனா 6.1 பில்லியன் டொலர்களை முதலீடு செயதுள்ளது.





சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் இருந்து லாவோஸின் தலைநகரமான வியண்டியனுக்கு இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஷ





இரு நாட்டு தலைவர்களும் வீடியோ மூலமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்த புகையிரதப்பாதை திட்டம் சீனாவுக்கும் லாவோஸுக்குமிடையே பிரிக்க முடியாத உறவை வலுப்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது.





இந்த புகையிரத சேவையை தாய்லாந்து,மலேசியா ஊடாக சிங்கப்பூர் வரை விஸ்தரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஆசியாவிலேயே வறுமையான நாடான லாவோஸுக்கு சீனாவுக்கு இந்த கடனை திருப்பிச்செலுத்துவது கடினமாக இருக்குமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.