எமனாக மாறிய தொலைபேசி - நடந்தது என்ன?

banner

நிர்மாணிக்கப்பட்டுவரும் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்த தனது கைத்தொலைபேசியை எடுப்பதற்கு குனிந்த நபரொருவர் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.





கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 10ஆம் திகதி வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.





மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இந்த ஐம்பத்தி ஆறு வயது காய்கறி வியாபாரி வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு கொலன்னாவ தெமட்டகொட வழியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலத்தின் வழியாக சென்றுள்ளார்.
அப்போது அவரது கைத்தொலைபேசி கீழே விழுந்து உள்ளது. அதை குனிந்து எடுப்பதற்கு முயற்சித்தபோது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த பாதுகாப்பற்ற பாலத்திலிருந்து இதற்கு முன்னர் ஒருவரும் இதேபோல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பாலத்துக்கு இருபுறமும் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.





இதேவேளை இரவு நேரங்களில் இந்தப் பாலத்துக்கு அருகே உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகர சபை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.