கொரோனா சுற்றுவட்டப்பாதை தளர்வா..?

banner

புதிய ஒமெக்ரோன் திரிபு கொரோனா வைரஸைப் பெரும் தொற்று நோய் (Pandemic) என்ற கட்டத்தில் இருந்து வெளியேற்றி உள்ளூர் நோய் (Endemic) என்ற அடுத்த நிலைக்கு மாற்றிவிடும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். அதற்கு ஏற்றாற்போல் அதன் தொற்று அறிகுறிகள் சாதாரண இருமல், தடிமல் போன்ற பருவகாலப் பிணிகளது குணங்குறிகளையே நோயாளர்களில் ஏற்படுத் துகிறது என்று கூறப்படுகிறது.





தடுப்பூசி ஏற்றியோர், ஏற்றாதோர் என்ற பாகுபாடு ஏதும் இன்றி எல்லோரையும் பரவிப் பீடித்து வருகிறது. பிரான்ஸின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை வகிக்கின்ற சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தொற்றுக்கு இலக்
காகியுள்ளார். அவர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவராவார்.





பிரான்ஸில் நாளாந்தம் சராசரி மூன்று லட்சம் பேர் தொற்றுக்குள்ளாகின்றனர். கொரோனா வைரஸின் முந்திய அறிகு
றிகளான மணம், சுவைத் திறன்கள் இழக்கப்படுவது போன்ற மோசமான விளைவுகள் இப்போது இல்லை.பொதுச்சுகாதாரப் பகுதியினர் தொற்றாளர்களி டம் நடத்திய ஒரு கணிப்பில் 43 வீதமான வர்கள் தங்களுக்கு வழமைக்கு மாறான களைப்பு(abnormal fatigue) இருந்தது எனக் கூறியிருக்கின்றனர்.தங்களுக்கு இருமல் இருந்தது என்று 40 வீதமானோ ரும், லேசான காய்ச்சல் காணப்பட்டதாக
35 வீதமானோரும் கூறியிருக்கின்றனர்.





இரவில் வியர்த்தல், தொண்டைக் கரகரப்பு, தலையிடி போன்ற அறிகுறிகளை யும் பலர் கூறியிருக்கின்றனர். சாதாரண மான இந்த அறிகுறிகளால் பலரும் தங்களுக்கு வைரஸ் பீடித்திருக்காது என்று எண்ணித் தங்களைப் பரிசோதிக் காமல் அலட்சியம் செய்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. தடுப்பூசி ஏற்றிக்
கொள்ளாதவர்களுக்கு அது ஆபத்துக்களை உண்டாக்கலாம் என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





டெல்ரா போன்று அல்லாமல் ஒமெக்ரோன் நுரையீரலை விடவும் சுவாசத் தொகுதியின் மேற்பகுதியையே (les voies respiratoires supérieures) அதிகம் தாக்கு கிறது என்று சில நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஒமெக்ரோன் பற்றி இவ்வாறு பலவித மதிப்பீடுகள் சொல்லப்பட்டு வந்தாலும் அது இன்னமும் "உயிரை எடுக்கக் கூடிய ஆபத்தான திரிபுதான்" என்பதை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து நினைவுபடுத்தி வருகிறது.





குமாரதாஸன். பாரிஸ்.