குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்போரின் வாய்க்கு பூட்டு போட்டது சீனா!

banner

எதிர்வரும் 4ஆம் திகதி பீஜிங்கில் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சீனாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக கருத்து வெளியிடும் பட்சத்தில் அவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படும் என சீன ஒலிம்பிக் குழு பிரதி பணிப்பாளர் Yang Shu தெரிவித்துள்ளார்.





இறுதியாக ஜப்பானில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் ஊடக மகாநாடுகளை நடத்தியிருந்தனர்.





பதக்கம் வெல்பவர்கள் அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது.





நோர்வே பனிச்சறுக்கு வீரர் எனக்கு சுயாதீனமாக கதைக்க பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.





போட்டியாளர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.





வரலாற்றை எடுத்துப்பார்த்தால் பெரும்பாலான விடயங்கள் விளையாட்டுப்போட்டிகள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன ஆனால் சீனாவில் சுயாதீனமாக கதைப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.





நவீன ஒலிம்பிக் யுகத்தில் வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது இது துன்பகரமானது. சர்வதேச ஒலிம்பிக் தலைமைத்துவக்குழு இந்த கேலிக்கூத்தான தீர்மானத்திற்கு எதிராக சர்வதேச ஆதரவை கோரியுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்பவர்களை பேச விடாது தடுக்கக்கூடாது;அமைதியாக இருப்பது என்பது சர்ச்சைக்குரியது என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உலக மெய்வல்லுநர் குழு பணிப்பாளர் கூறியுள்ளார்.