இரவு நேரங்களில் பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளை இரகசியமாக எட்டிப்பார்த்து, பெண்கள் நித்திரை கொள்ளும் அழகை இரசிக்கும் நபரொருவரை சுற்றி வளைத்து பிடித்த கிராமவாசிகள் , அவரை நையப் புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கொழும்பு நகருக்கு அண்மையிலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குள் இரவு நேரங்களில் ஓடுகளை பிரித்து அல்லது ஜன்னல் வழியாக உட்புகுந்து பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளில் எட்டிப்பார்த்து ரசிக்கும் நபர் ஒருவர் நடமாடுவதாக பரவிய தகவலொன்றை அடுத்து அந்தப் பிரதேசத்திலுள்ள யுவதிகள் மிகவும் விழிப்பாக இருந்தனர்.
அப்படியிருந்தும் அவர்களது கண்களில் மண்ணைத் தூவி பிரதேசத்தில் தினம்தோறும் ஏதாவது ஒரு வீட்டில் பெண்களின் அறைகளை எட்டிப்பார்ப்பது தொடர்ந்தும் இடம்பெற்று வந்துள்ளது.
ஜன்னல் வழியாக புகுந்து பெண்கள் அயர்ந்து தூங்கும் அழகை ரசித்துவிட்டு அங்குள்ள கைத்தொலைபேசி களையும் எடுத்துக்கொண்டு பின்கதவால் வெளியேறி
விடுவதை இந்த நபர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பிரதேசவாசிகள் இந்த நபர் தொடர்பாக அப்பகுதி பொலிசாருக்கும் அறிவித்துள்ளனர்.எப்படியாவது இந்த மன்மதனை பிடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் பிரதேச இளைஞர் யுவதிகள் தங்களது வீடுகளில் விடிய விடிய விழித்திருந்தனர்.
ஒரு நாள் இந்த நபர் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஜன்னல் வழியாக நுழைய முற்பட்டபோது வசமாக அப்பகுதி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து இளைஞர்கள் மட்டுமின்றி யுவதிகளும் சேர்ந்து அந்த நபரை வசை பாடியவாறு அடித்துத் துவைத்து அப்பிரதேச பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.