நாடாளுமன்றின் பதவி காலம் நீடிக்கப்படுமா?

banner

" ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்து - தற்போது அரசுக்கு சார்பாக செயற்படும் டயானா கமகே தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





" கொரோனா பெருந்தொற்றால் ஜனாதிபதியின் பதவி காலத்தில் இரு வருடங்கள் வீணாகிவிட்டன. அந்த இரு வருடங்களையும் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்த வேண்டும். இது சம்பந்தமான யோசனையை நான் முன்வைக்கவுள்ளேன்.





அத்துடன், நாடாளுமன்றத்தின் பதவி காலமும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியால் தனித்து செயற்படமுடியாது. அவருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்." - என்றும் டயானா குறிப்பிட்டார்.