அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் - இருவர் கைது!

banner

அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு கொலை அச்சறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Ryan Matthew Conlon, 37, Ryan Merryman, 37, ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.





Ryan Matthew மேரிலாண்டிலிருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பொலிஸார் அவரை விசாரித்த போது தான் ஜனாதிபதியை சந்திப்பதற்காக வாஷிங்டனுக்கு செல்வதாக கூறியுள்ளார். அத்துடன் தான் கடவுளால் வழங்கப்பட்ட ஒரு புத்தகத்தை ஜனாதிபதியிடம் வழங்கப்போவதாக கூறியுள்ளார். முன்னதாக புலனாய்வாளர் ஒருவர் அவரை விசாரித்த போது "நாட்டின் இதயத்தில் உள்ள பாம்பின் தலையை அறுக்குமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.





அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஒரு உணவகத்தின் முன்னால் இவர் சிறிய ரக தொலைநோக்கி ஒன்றுடன் வெடிமருந்தையும் வைத்திருந்ததை புலனாய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.





மற்றவர் வெள்ளை மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், தேசிய புலனாய்வு உத்தியோகத்தர்களை சுட்டுகொல்லப்போவதாகவும் தகவல் அனுப்பியிருந்தார்; இவர் நீதிமன்ற விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது தொலைபேசி இலக்கம் முகநூல் என்பவற்றை வைத்தே பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். உரிய அதிகாரியின் அனுமதியின்றி இவர் இணையத்தை பாவிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.தான் ஆத்திரத்தில் அந்த மிரட்டலை விடுத்ததாக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
மற்றவரின் வழக்கு விசாரணை திங்கட்கிழமை நண்பகல் இடம்பெறவுள்ளது.