'இன்று முதல் நாளாந்தம் 80,000 சிலிண்டர்கள் விநியோகம்'

Sri Lanka 1 வருடம் முன்

banner

எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று(18) மீளவும் ஆரம்பமாகவுள்ளது.

2,800 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதை அடுத்து, எரிவாயு சிலிண்டர்களை இன்று(18) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

கப்பலிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று(17) ஆரம்பமானதாக அவர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், இன்று(18) முதல் நாளாந்தம் 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அவர் கூறினார்.

LP எரிவாயுவை ஏற்றிய 2 கப்பல்களுக்கு 6.5 மில்லியன் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை(19) நாட்டை வந்தடையவுள்ளது.